22 Tuesday, 2025
2:22 pm

RCB vs PBKS IPL 2025 Final Highlights

“ஐபிஎல் IPL 2025 இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (RCB) 18 ஆண்டுகளின் காத்திருப்பை முடித்து பஞ்சாப் கிங்ஸ் (PBKS) அணியை 6 ரன்களால் வீழ்த்தி சாம்பியனானது! RCB கடைசியாக ஐபிஎல் கோப்பையை வென்றது!“Ee Sala Cup Namde ” கனவு இன்று நிஜமானது! 🏆 வெற்றி நிகழ்வு வீடியோ: RCB Trophy Lift Video[Winning Moment > https://youtu.be/Hym3yndqJlY?feature=shared] RCB 2025 லீக்கில் குழு & நாக்அவுட் போட்டிகளில் தடையின்றி வென்று சிறப்பாக செயல்பட்டது இந்த […]

RCB கோப்பையை வெல்லுமா?

ஐபிஎல் வரலாற்றில் 17 வருடங்களாக கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் அணிகளுள் ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரும் (ஆர்சிபி) ஒன்று. நட்சத்திர பட்டாளங்கள், அதிரடி பேட்ஸ்மேன்கள் படை என ஒவ்வொரு சீசனிலும் குதூகலமாக அந்த அணி களம் கண்ட போதிலும் சாம்பியன் கோப்பையை வெல்வது என்பது அந்த அணிக்கு கானல் நீராகவே உள்ளது. எனினும் இம்முறை 18-வது சீசனில் புத்தெழுச்சியுடன் களமிறங்குகிறது ஆர்சிபி. புதிய கேப்டனாக ரஜத் பட்டிதார் நியமிக்கப்பட்டுள்ளார். நட்சத்திர பேட்ஸ்மேனான விராட் கோலி அணியும் […]

RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி!

ஜாஸ் பட்லரின் வெளியேற்றம், தோனி உடனான உறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஐபிஎல் ஒரு அணியை வழிநடத்துவதற்கும், மிக உயர்ந்த தரத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்பு தருகிறது. அதேசமயம், பல நெருங்கிய நட்புகளையும் உருவாக்க உதவுகிறது. ஜாஸ் பட்லர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருந்தோம். […]

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (KKR) அணி

நடப்பு சாம்பியனான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் (கே.கே.ஆர்) அணி புதிய கேப்டனான அஜிங்கிய ரஹானே தலைமையில் கோப்பையை தக்க வைக்கும் முனைப்பில் களமிறங்குகிறது. 3 முறை சாம்பியனான அந்த அணி தொடரின் முதல் ஆட்டத்தில் கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் வரும் 22-ம் தேதி ராயல் சாலஞ்சர்ஸ் பெங்களுரு அணியை சந்திக்கிறது. கடந்த ஆண்டில் சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த ஸ்ரேயஸ் ஐயர் இம்முறை பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு மாறி உள்ளதால் அனுபவம் வாய்ந்த அஜிங்க்ய ரஹானே […]

தோனிக்கு பொறாமை? ரோஹித் சர்மா – ரசிகர்கள் குற்றச்சாட்டு!

விராட்கோலியும், ரோகித் சர்மாவும் நான்கு ஐசிசி கோப்பைகளை வென்று அதிக ஐசிசி கோப்பையை வென்ற இந்திய வீரர்கள் என்ற சாதனையை படைத்திருக்கிறார்கள். இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் நட்சத்திர வீரரான தோனி, டெஹ்ராடூன் சென்றிருந்த நிலையில் அப்போது அவரிடம் செய்தியாளர்கள் சாம்பியன்ஸ் கோப்பை தொடரை இந்திய அணி வென்றிருக்கிறது. இதை நீங்கள் எப்படி பார்க்கிறீர்கள் என்று கேள்வி கேட்டனர். அதற்கு தோனி கோபமாக இங்கிருந்து விலகி செல்லுங்கள் என்பது போல கையை காட்டினார். சாம்பியன்ஸ் […]

ஜெயசூர்யாவின் சாதனையை முறியடித்த ரோகித் சர்மா!

சர்வதேச போட்டிகளில் அதிக சிக்ஸர் அடித்த வீரர்…ஒருநாள் போட்டிகளில் 11 ஆயிரம் ரன்களுக்கு மேல் குவித்தவர்…களத்தில் நின்று விட்டால் எதிரணி சின்னாபின்னமாவது உறுதி.. என்ற புகழுரைக்குச் சொந்தக்காரர் ரோகித் சர்மா.. ஆனால், சாம்பியன்ஸ் டிராபியின் இறுதிப்போட்டிக்கு முன்பு வரை, லீக் ஆட்டங்களில் 41, 20 மற்றும் 10 ரன்களும், அரையிறுதியில் 28 ரன்களையும் மட்டுமே எடுத்தார் ரோகித் சர்மா. இதனால், அவரது ஃபார்ம் குறித்து முன்னாள் வீரர்கள் பல்வேறு விமர்சனங்களை முன்வைத்தனர். இது ஒருபுறம் இருக்க, ரோகித் […]

முகமது ஷமி – உலக சாதனை!

பந்துவீச்சில் ஒருநாள் போட்டிகளில் 6-வது முறையாக 5 விக்கெட்டுகளை வீழ்த்தி கம்பேக் கொடுத்துள்ளார் முகமது ஷமி. அதுமட்டுமல்லாமல், வேகமாக 200 விக்கெட்டுகளை எட்டிய பந்துவீச்சாளர் என்ற பெருமையையும் ஷமி பெற்றார். 102 போட்டிகளில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க், அதிவேகமாக 200 விக்கெட்டுகளை வீழ்த்திய வீரர்களில் முதலிடத்தில் உள்ளார். ஷமி, 104 போட்டிகளில் 200 விக்கெட்டுகளை வீழ்த்தி 2-வது இடத்தில் பாகிஸ்தான் முன்னாள் வீரர் சக்லைன் முஸ்டாக்குடன் இடத்தைப் பகிர்ந்துள்ளார். இந்த 200 விக்கெட்டுகளை வீழ்த்த ஷமி […]

கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் – ரஹானே பேட்டி!

ரஹானே, கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் என்று கூறியுள்ளது அதிசயிக்க வைக்கிறது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறும்போது, நடந்து முடிந்த பார்டர். கவாஸ்கர் டிராபியை வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தது மிகவும் வேதனையாகவும், கடினமாகவும் இருந்தது என்று கூறியுள்ளார். “நான் ரொம்ப கூச்ச சுபாவியாகவே இருந்தேன். அதிகம் பேச மாட்டேன். என் கவனமெல்லாம் கிரிக்கெட் தான், கிரிக்கெட் ஆடு, வீட்டுக்குப் போ என்பதுதான் என் தாரக மந்திரமாக இருந்து வந்தது. […]

மகளிர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார்? யார்?

மகளிர் ஐபிஎல்கிரிக்கெட் வீராங்கனைகளுக்கு Women’s League என்ற பெயரில் ஐபிஎல் போட்டி நடத்தப்படுகிறது. பெண்கள் ஐபிஎல்லில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு, குஜராத் ஜெயண்ட்ஸ், டெல்லி கேபிடல்ஸ், உபி வாரியர்ஸ், மும்பை இந்தியன்ஸ் ஆகிய 5 அணிகள் விளையாடுகின்றன. மகளிர் ஐபிஎல்லின் முதல் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களுரு அணியும், குஜராத் ஜெயண்ட்ஸ் அணியும் இன்று மோதுகின்றன. மகளிர் ஐபிஎல் அணிகளின் உரிமையாளர்கள் யார்?யார்? அதிக சொத்து மதிப்பு கொண்ட அணி எது? என்பது குறித்து பார்ப்போம். டெல்லி […]

சாம்பியன்ஸ் டிராபி தகவல்கள்

இந்த சாம்பியன்ஸ் டிராபி, தொடர் ஒருநாள் போட்டி ஃபார்மெட்டில் நடத்தப்படுகிறது. 2008-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபி பாகிஸ்தானில் நடத்த முடிவு செய்யப்பட்டது, ஆனால் பாதுகாப்பு காரணங்களால் எந்த அணியும் விளையாட முன்வரவில்லை என்பதால் 2009-ஆம் ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் அந்த தொடர் நடத்தப்பட்டது. 2021-ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை நடத்த இந்தியாவுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டடது. ஆனால், கொரோனா பெருந்தொற்று காரணமாக அது பின்னர் டி20 உலகக் கோப்பையாக, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடத்தப்பட்டது. 2023-ஆம் ஆண்டு உலகக் […]