22 Tuesday, 2025
2:22 pm

மனம் திறந்த ஜீ.வி. பிரகாஷ்

இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், “சினிமா துறையில் 20 ஆண்டுகள் இருந்ததால் என்னால் பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என அனைத்தையும் எதிர்கொள்ள முடிகிறது. இத்தனை வருட அனுபவம் எனக்கு பெரியதாக உதவியிருக்கிறது. கதைக்கு ஏற்ப இசையமைக்கிறேன். வித்தியாசமான ஒன்று தேவைப்படும்போது அதற்கு தகுந்த வழியில் நான் வேலை செய்கிறேன். நான் நடித்து இசையமைத்து தயாரித்த கிங்ஸ்டன் திரைப்படம் சரியாக போகவில்லை தான். ஆனால், அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் […]

RR அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் பேட்டி!

ஜாஸ் பட்லரின் வெளியேற்றம், தோனி உடனான உறவு உள்ளிட்ட விஷயங்கள் குறித்து ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனான சஞ்சு சாம்சன் பகிர்ந்துள்ளார். ஜியோஹாட்ஸ்டார் தளத்துக்கு அவர் அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியிருப்பதாவது: “ஐபிஎல் ஒரு அணியை வழிநடத்துவதற்கும், மிக உயர்ந்த தரத்தில் விளையாடுவதற்கும் வாய்ப்பு தருகிறது. அதேசமயம், பல நெருங்கிய நட்புகளையும் உருவாக்க உதவுகிறது. ஜாஸ் பட்லர் எனக்கு மிக நெருக்கமான நண்பர்களில் ஒருவர். நாங்கள் ஏழு ஆண்டுகள் சேர்ந்து விளையாடியுள்ளோம். ஒருவருக்கொருவர் மிக நெருக்கமாக இருந்தோம். […]

தல தோனியை சந்திக்க மிகுந்த ஆர்வம் – ஜடேஜா பேட்டி!

ஐபிஎல் 2025ஆம் ஆண்டு சீசன் மார்ச் 22ஆம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தங்களுடைய முதல் போட்டியில் பலம் வாய்ந்த மும்பை இந்தியன்ஸ் அணியை எதிர்கொள்கிறது. இந்த போட்டி மார்ச் 23ஆம் தேதி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறுகிறது. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் பயிற்சி முகாம்க்கு ஜடேஜா வந்து சேர்ந்துள்ளார். சாம்பியன்ஸ் கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி பெற்ற நிலையில் ஜடேஜா நேரடியாக துபாயில் இருந்து […]

மதராஸி என்ற டைட்டில் ஏன்? ஏ ஆர் முருகதாஸ் பேட்டி!

சிவகார்த்திகேயன் – முருகதாஸ் கூட்டணியில் உருவாகும் மதராஸி படத்தின் டைட்டிலும், க்ளிம்ப்ஸ் வீடியோவும் சிவகார்திகேயனின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. இப்போது அந்தப் படம் குறித்து இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் பேட்டி ஒன்றை அளித்துள்ளார். அதில் படம் பற்றி பல சுவாரஸ்யமான விஷயங்களைப் பகிர்ந்துள்ளார். முதலில் இப்படத்திற்கு வைக்கப்பட்டிருக்கும் மதராஸி என்ற தலைப்பு பற்றி கூறிய முருகதாஸ் “இந்தக் கதை வட இந்திய கதாப்பாத்திரங்களின் பார்வையில் இருந்து துவங்குகிறது. மதராஸி என்ற பதம், வட இந்தியர்கள், தென் […]

கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் – ரஹானே பேட்டி!

ரஹானே, கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் என்று கூறியுள்ளது அதிசயிக்க வைக்கிறது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறும்போது, நடந்து முடிந்த பார்டர். கவாஸ்கர் டிராபியை வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தது மிகவும் வேதனையாகவும், கடினமாகவும் இருந்தது என்று கூறியுள்ளார். “நான் ரொம்ப கூச்ச சுபாவியாகவே இருந்தேன். அதிகம் பேச மாட்டேன். என் கவனமெல்லாம் கிரிக்கெட் தான், கிரிக்கெட் ஆடு, வீட்டுக்குப் போ என்பதுதான் என் தாரக மந்திரமாக இருந்து வந்தது. […]