கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் – ரஹானே பேட்டி!

ரஹானே, கிரிக்கெட் தான் தனக்கான பி.ஆர்.ஏஜெண்ட் என்று கூறியுள்ளது அதிசயிக்க வைக்கிறது. ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள பேட்டியில் மேலும் கூறும்போது, நடந்து முடிந்த பார்டர். கவாஸ்கர் டிராபியை வீட்டில் உட்கார்ந்து கொண்டு தொலைக்காட்சியில் பார்த்தது மிகவும் வேதனையாகவும், கடினமாகவும் இருந்தது என்று கூறியுள்ளார். “நான் ரொம்ப கூச்ச சுபாவியாகவே இருந்தேன். அதிகம் பேச மாட்டேன். என் கவனமெல்லாம் கிரிக்கெட் தான், கிரிக்கெட் ஆடு, வீட்டுக்குப் போ என்பதுதான் என் தாரக மந்திரமாக இருந்து வந்தது. […]