NewsOne Tamil Nadu

“காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.

Spread the love


கார்த்தி சமீபத்தில் “வா வாத்தியாரே” படத்தில் தனது பகுதியை முடித்திருக்கிறார். தற்போது, “சர்தார் 2” படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.


இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முழுக்க முழுக்க ஒரு காதல் கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “வா வாத்தியாரே”, “சர்தார் 2” ஆகிய படங்களை முடித்ததும், “கைதி 2” மற்றும் “டாணாக்காரன்” இயக்குநர் தமிழ் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார்.


மேலும், மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும் அவர் இணைவார் என கூறப்படுகிறது. இந்நிலையில், பிரபல இயக்குநர் கௌதம் மேனன், கார்த்தியை சந்தித்து ஒரு கதையை நன்கு விவரித்ததாகவும், அந்தக் கதை அவருக்கு பிடித்ததால் இப்படத்தில் நடிக்க சம்மதித்திருக்கிறார் என்றும் தகவல் வந்துள்ளது. இந்தப் படத்தின் திரைக்கதை, வசனங்களை ஜெயமோகன் எழுதுகிறார் என்று கூறப்படுகிறது.

கார்த்தி, இதற்கு முன்பு “காற்று வெளியிடை” என்ற ஒரு முழுநீள காதல் கதையில் நடித்த நிலையில், மீண்டும் காதல் கதையில் நடிக்க இருப்பது ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது.