சுற்றுலா
கொடைக்கானல்
மாவட்டத்தில் உள்ள ஒரு தாலுகாவின் தலைநகரமும் நகரமும் ஆகும்.[1] கொடைக்கானலின் தொடக்க காலம் முதலே குடியிருந்து வருபவர்கள் பளியர் இன மக்களேயாவர். சங்க இலக்கியங்களில் மிகவும் முந்தைய காலத்தில் கொடைக்கானல் மற்றும் பழனி மலைகள் தொடர்பான தனிப்பட்ட குறிப்புகள் காணப்படுகின்றன.[2]
1821 ஆம் ஆண்டில், லெப்டினன்ட் பி. எஸ். வார்டு, என்ற பிரித்தானிய நில அலவையாளர், கொடைக்கானலுக்கு வருகை தந்த முதலாவது ஐரோப்பியராவார். 1834 ஆம் ஆண்டில், மதுரை ஆட்சியர் தேவதானப்பட்டியிலிருந்து ஏறி, கொடைக்கானலில் ஒரு சிறிய பங்களாவைக் கட்டினார். 1863 ஆம் ஆண்டில், மதுரை ஆட்சியர் சர் வேர் ஹெண்டி லீவினி, கொடைக்கானலில் ஏரி ஒன்றை 60 ஏக்கர் நிலத்தில் உருவாக்கினார். இதற்காக இப்பகுதியில் ஓடிய நீரோடைகளை தடுப்பணைகள் மூலம் தடுத்து ஏரியாக மாற்றினார். அவர் துாத்துக்குடியிலிருந்து இந்த ஏரியில் சவாரி செய்வதற்கான முதல் படகுகளையும் கொண்டு வந்தார். 1890 ஆம் ஆண்டில் கொடைக்கானலில் படகு மன்றம் ஒன்று அமைக்கப்பட்டது.[3] நவீன கால கொடைக்கானலானது அமெரிக்க சமய பரப்புக்குழுவினர்களால், சமவெளிப் பகுதிகளில் உள்ள உயர் வெப்பநிலையிலிருந்தும், அயனமண்டல நோய்களிலிருந்தும் தப்பித்துக் கொள்ளும் பொருட்டு 1845 ஆம் ஆண்டு ஒரு மலை வாழிடமாக உருவாக்கப்பட்டது.[4]