வெங்காயத்தின் மருத்துவ குணங்கள்!
வெங்காயத்தில் எத்தனை எத்தனையோ நற்குணங்கள் உள்ளன. சின்ன வெங்காயம், பெரிய வெங்காயம் இரண்டும் ஒரே குணத்தை கொண்டவைதான். வெங்காயத்தில் உள்ள அலைல் புரோப்பைல் டைசல்பைட் உள்ளது.
வெங்காயம் குறைவான கொழுப்பு சத்து உள்ளது. எனவே உடல் பருமன் உள்ளவர்கள் வெங்காயத்தை நிறைவே எடுத்துக் கொள்ளலாம்.
பச்சை வெங்காயத்தை தயிர் சாதத்துடன் சேர்த்து உண்டால் நல்ல தூக்கம் வரும்.
வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்தி செரிமானத்துக்கு உதவுகிறது.
வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும். இழந்த சக்தியை மீட்டுத் தரும்.
தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் வெங்காய சாறை தினமும் அரை அவுன்ஸ் வீதம் சாப்பிட்டு வர நுரையீரல் சுத்தமாகும்.
வெங்காயச்சாறுடன் கடுகு எண்ணெய் கலந்து கீல் வாயு காரணமாக மூட்டுகளில் ஏற்படும் வலி உள்ள இடத்தில் தடவிவர குணமாகும்.