22 Tuesday, 2025
2:22 pm

விடாமுயற்சி

அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் கடந்த பிப்ரவரி 6-ம் தேதி செம மாஸாக வெளியாகி இருந்தது. லைகா நிறுவனம் தயாரிக்க மகிழ்திருமேனி இயக்கத்தில் வெளியான இப்படத்தில் அஜித்துடன், த்ரிஷா, அர்ஜூன், ஆரவ், ரெஜினா என பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைப்பில் இப்படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் ஹிட், அதிலும் Sawadeeka பாடல் பட்டிதொட்டி எங்கும் கலக்கியது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான விடாமுயற்சி படம் முதல் நாளில் மட்டும் ரூ.34 கோடி வரை வசூல் செய்துள்ளது. விமர்சனம் மற்றும் […]

வட சென்னை -2

தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி கடந்த 2018ம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் வடசென்னை. இப்படத்தில் தனுஷ{டன் இணைந்து அமீர், கிஷோர், டேனியல் பாலாஜி, சமுத்திரகனி, ஐஸ்வர்யா ராஜேஷ், ஆண்ட்ரியா என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இப்படம் வெளிவந்து மாபெரும் அளவில் வெற்றியடைந்தது. முதல் பாகத்தின் இறுதியில் ‘வடசென்னை 2’ “அன்புவின் எழுச்சி” என படத்தை முடித்திருப்பார் இயக்குநர். இதனால் வடசென்னை 2 படத்தை ஆவலுடன் எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர். சமீபத்தில் பிரபல விருது விழா […]

மனம் திறந்த ஜீ.வி. பிரகாஷ்

இந்நிலையில், ஜீ.வி.பிரகாஷ் பேட்டி ஒன்றில் பேசிய விஷயம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது.அதில், “சினிமா துறையில் 20 ஆண்டுகள் இருந்ததால் என்னால் பொறுப்பு, பதற்றம், அழுத்தம் என அனைத்தையும் எதிர்கொள்ள முடிகிறது. இத்தனை வருட அனுபவம் எனக்கு பெரியதாக உதவியிருக்கிறது. கதைக்கு ஏற்ப இசையமைக்கிறேன். வித்தியாசமான ஒன்று தேவைப்படும்போது அதற்கு தகுந்த வழியில் நான் வேலை செய்கிறேன். நான் நடித்து இசையமைத்து தயாரித்த கிங்ஸ்டன் திரைப்படம் சரியாக போகவில்லை தான். ஆனால், அது குறித்து எனக்கு எந்த வருத்தமும் […]

கிறிஸ்டோபர் நோலனின் ஒடிசி திரைப்படம்!

பிரபல ஹாலிவுட் இயக்குனர் கிறிஸ்டோபர் நோலன் இயக்கத்தில் புராதாண காவியமான ஒடிசி உருவாகத் தொடங்கியுள்ள நிலையில் அதற்கான ஒரு புதிய நகரத்தையே கட்டி எழுப்பி வருகிறார்களாம். உலகம் முழுவதும் அதிகமான ரசிகர்களை கொண்ட ஹாலிவுட் இயக்குனர்களில் முக்கியமானவர் கிறிஸ்டோபர் நோலன். இவர் இயக்கிய டார்க் நைட் ட்ரைலாஜி, இன்செப்ஷன், இண்டெஸ்டெல்லார் உள்ளிட்ட படங்களுக்கு தமிழகத்திலுமே ஏரளமான ரசிகர்கள் உள்ளனர். தற்போது முதன்முறையாக வரலாற்று இதிகாச படத்தை இயக்குகிறார் நோலன். ஹாலிவுட்டில் பெரும்பாலும் கிராபிக்ஸ் தொழில்நுட்பம் பயன்படுத்தப்படும் நிலையில், […]

“காற்று வெளியிடை’ படத்திற்கு பின் மீண்டும் ஒரு ரொமான்ஸ் படம்.

கார்த்தி சமீபத்தில் “வா வாத்தியாரே” படத்தில் தனது பகுதியை முடித்திருக்கிறார். தற்போது, “சர்தார் 2” படப்பிடிப்பில் ஈடுபட்டு வருகிறார். இந்த நிலையில், முன்னணி இயக்குநர்களின் படங்களில் தொடர்ந்து நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்த நிலையில் நீண்ட இடைவெளிக்குப் பிறகு, முழுக்க முழுக்க ஒரு காதல் கதையில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. “வா வாத்தியாரே”, “சர்தார் 2” ஆகிய படங்களை முடித்ததும், “கைதி 2” மற்றும் “டாணாக்காரன்” இயக்குநர் தமிழ் படத்தில் கார்த்தி நடிக்க இருக்கிறார். மேலும், மாரி செல்வராஜ் […]

முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ள நடிகை சமந்தா!

நடிகை சமந்தா விரைவில் தனது முதல் திரைப்படத்தை தயாரிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த படத்தை ஏற்கனவே சமந்தா நடித்த இரண்டு படங்களை இயக்கிய பிரபல பெண் இயக்குநர் தான் இயக்க இருப்பதாக கூறப்படுகிறது. தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, கடந்த சில ஆண்டுகளாக திரைப்படங்களில் குறைவாகவே தோன்றியுள்ளார். உடல் நலகோளாறு காரணமாக, திரைத்துறையில் தனது கவனத்தை குறைத்து, சில வெப் தொடர்களில் மட்டுமே நடித்து வந்தார். இந்த சூழலில், சமந்தா […]

இட்லி கடை ரிலீஸ் தேதி மாற்றம்!

குட் பேட் அக்லி மற்றும் தனுஷ் நடித்து இயக்கிய இட்லி கடை ஆகிய இரண்டு திரைப்படங்களும் ஏப்ரல் 10ஆம் தேதி ஒரே நாளில் ரிலீஸ் ஆகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது தனுஷ் தனது இட்லி கடை படத்தின் ரிலீஸ் தேதியை மாற்ற இருப்பதாகவும், ஆகஸ்ட் மாதத்திற்கு தள்ளி வைக்க இருப்பதாகவும் கூறப்படுவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அஜித் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் உருவாகியுள்ள குட் பேட் அக்லி படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில், இந்த […]

ஜேம்ஸ் பாண்ட் 007

“ஒவ்வொரு ஆணும் ஜேம்ஸ் பாண்டாக இருக்க விரும்புகிறான். ஒவ்வொரு பெண்ணும் பாண்டுடன் இருக்க விரும்புகிறாள்” என்பது புகழ்பெற்ற வாசகம். இத்தகைய பிரபலமான கதாபாத்திரத்தை உருவாக்கியவர் பிரிட்டனைச் சேர்ந்த புகழ்பெற்ற எழுத்தாளர் இயான் ஃபிளெமிங். திரில்லர் பட ரசிகர்களின் எதிர்பார்ப்புகளை ஏகபோகமாய் பூர்த்தி செய்வதே ஜேம்ஸ் பாண்ட் திரைப்படங்களின் வெற்றி சூத்திரம். ஏறக்குறைய 63 ஆண்டுகள், 3 தலைமுறை ரசிகர்கள் என தேசம், கலாச்சாரம், மொழி எல்லைகளை கடந்து பாண்ட் படங்கள் கொண்டாடப்படும்.உலகின் கால்வாசி மக்கள் குறைந்தது ஒரு […]